17 நவ., 2014

மீட்டுத்தருமா வருங்காலம் ?





இதோ இவர்கள் வாழ்ந்தக்காலம்,
வசந்தக்காலம்! ,
அது இறந்தக்காலம்!
இனி வருவது அவசரக்காலம்!

கணினியோடு வாழும் நேரம்.
அதுப்போல் இருப்பது எக்காலம்?
அடுக்கு வீடுகளில் அடைந்தக்காலம்
அடுத்த வீடுக்கும் உறவில்லாத கலிகாலம்
ஆசைகளை துறந்த கோலம்
இதானே இன்றைய காலம் .
காதலாய் காற்று வீசும்.
வயல்களில் கதிர்கள் பேசும்.
வானம் தூவும் மழைக்காலம்,
மீண்டும் வருமா அந்தக்காலம்!
மீட்டுத்தருமா வருங்காலம் ?
இதோ இவர்கள் வாழ்ந்த காலம்
வசந்தக்காலம்
அது என்றும் நமக்கு இறந்த காலம்!

தீராத அழகி

வாளை விட 
செவ்வாழை இதழுக்கு,

ஏது ஈடுயிணை!


வில்லைவிட 
உன் இமைகளுக்கு 
கூர்மை!

ஆயுத்ததைவிட 
இளமையான உடலுக்கு 
வலிமை!

நீயோ
தீராத அழகி
திமிர் படித்த ஜாதி!
தீ பிடிக்கும் 
வழி!


அணக்க சொல்லடி
அடைங்கி போக 
வாடி...

நானோ 
தீவிரவாதி!
ஏன் இன்னும் 
விலகி...



விடைச்சொல்லு 
அழகி!
தடையின்றி 
இடைவெளி குறைத்து 
செய்துவிடு என்னை 
வதம்!
விட்டுவிடு 
உன் பிடிவாதம்!

நமக்குள் 
போட்டிகள் எதற்கு ?
போர் தொடுப்பேன் 
உனக்கு!
போர்வையாய் நீ 
எனக்கு!



மழை...

மழை!
இறைவன் தந்த 
இயற்கைக் குளியல் இது 
நம்மோடு உறவாடும் 
உறவு இது!

குடை பிடித்து 
நீயும் மழையை தடுக்க வேண்டாம் 
பூமி நனையும் போது
நீயும் நனைய மறுக்கவேண்டாம்.

இறைவன் தரும் பரிசு 
இனி நீயும் ஒதுங்க வேண்டாம்.
மேகம் தரும் மோகத்தின்
கவிதை இது...

மழையை போலவே 
ஒரு அழகு ஏது..
இந்த மழையின் அழகுக்கு 
சொல்ல  வார்த்தைகள் இருக்கா பாரு..!

மனிதனாகவே நான் சாகனும்!

உன் பணியை ஆற்று !
உனக்கு இல்லை மாற்று!
நீ தான் விடியும் கிழக்கு!
இன்னும் நல்ல திசைக் காட்டு!

காதலோடு உன்னை சேர்க்காதே!
உன வீரத்தை புதைக்காதே !
தமிழ்ப் பேச மறுக்காதே!
மற்ற மொழிகள் கற்க தடுக்காதே!
மண்ணை நாமும் நேசிக்கணும்!
மரியாதை தந்து பழகணும் !
மனசே நீ மாற்றனும்!
மனிதனாகவே நாம் சாகனும்!

16 நவ., 2014

நம் உறவுகளில் ஒன்று!

பேருந்து!
நம் வாழ்க்கையோடு 
வலம் வரும் உறவு!
புளிமுட்டையாய் திணிக்கப்பட்ட 
மனிதர்களின் ஊர்வலம்!
பாதையே இல்லாத ஊருக்கும் 
பேருந்துகள் நலம் விசாரித்து 
வருகிறது!
படிகளில் கூட பயமின்றி 
பயணம் செய்கின்ற
இளைய தலைமுறைகள்!
வன்முறைக்கு முதல் பலி 
பேருந்து தான்!
உடைக்கப்படலாம்!இல்லை 
எரிக்கப்படலாம்!
முன்னே போங்க 
என்று 

உலகிலேயே வாழ்த்துச்சொல்லும் 
நடத்துனர்!
கதாநாயனாக எண்ணத்தில் 
வளைத்து, நிறுத்தி ,ஓட்டிவரும்,
நம் உயிருக்காக்கும் 
தோழனாய் ஓட்டுனர்!
துருனாற்றம்,வேர்வை நாற்றம்,மத்தில்,
மல்லிகை வாசமும் வந்து போகும்!
நெருக்கத்தில் ஜாதி, மதம், காணாத 
உலகம் பேருந்து மட்டுமே!
மூச்சுக் காற்றுக் கூட 
ஈரத்தை காயவைக்கும் வெப்பம் 
இருக்கும்!
சிற்றின்ப கயவர்களின் 
மத்தில் பெண்களின் 
நிலை தடுமாற்றமாகவே இருக்கும்!
மனதுக்குள் அனல்க் கக்கும்!
அடக்கி வச்சிக்கப்படும்!
திருடர்களின்
 
கைவரிசை 
நடந்த வண்ணமாக இருக்கும்!
இத்தனைக்கும் நடுவில் தான் 
தினம் நமது பயணம்!
பேருந்து 
நம் உறவுகளில் ஒன்று!

வெங்காயம்...

என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!
என்னை பார்த்தால்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.
நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்

அச்சமில்லை!

அச்சமில்லை! அச்சமில்லை!
உன் வாழ்விலே!
வரும் தோல்வியெல்லாம் 
இறந்து போகுமே!
நீ துணிந்து நின்றால்,
அச்சமில்லை! அச்சமில்லையே!

வஞ்சமில்லை வஞ்சமில்லை 
காணும் வாழ்விலே!
வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம் 
நடுங்கி ஓடுமே!
நீ எதிர்த்து போரிட்டால் 
வெற்றி உன் வசமே!

பயமில்லை பயமில்லை 
வாழும் வாழ்விலே !
மலையென எரிமலையென 
எழுந்தால் நீயே!
உன் பகைவனை
 ஜெயிப்பாயே
அவனை அழிப்பாயே!

விடியல் வேலை ..

விடியல் வேலை 
உன் வார்த்தையின் ஆரம்பம் 
உள்ளத்தின் உதயம்
அன்பின் அடைக்கலம் 
தேடலின் தோழன்மை 
எல்லாமே நீ சொல்லும்
இந்த ஒரு வார்த்தையில்
உருகி போகுதடா...!

ஏமாற்றத்துடன்

தொடர் மழை தான் 
விடுமுறையில்லை 
ஏமாற்றத்துடன் 
குழந்தைகள்...!

என்னை உடுத்திக்கொள்.

காதல்
மழையில் நனைத்து
துவைத்து
சலவை செய்யப்பட்டது மனது.

இன்னுமா புரியவில்லை
உன் வருகைக்காக தான்டா.
காதல் குளிரில்
கமபளி எதற்கு
நான் இருக்கும் போது...!
நீ சொல்ல வேண்டியது
நான் சொல்லுகிறேன்
புரிந்துக்கொள்
என்னை உடுத்திக்கொள்.

காதல் ஊற்றே...

காதல் ஊற்றே
என்னை காப்பாற்று
அவள் மீது பற்று
அது தீயாய் பற்றி எரிவதை கண்டு
காதல் ஊற்றே
என்னை காப்பாற்று...!


காற்றே கொஞ்சம் நிறுத்து
அவள் நடந்து போகும் போது
காரிகை கலைந்து விடாமலும்
முந்தானை பறந்து விடாமலும்
அவளை காப்பாற்று..!

உற்று பார்க்கும் அவள் விழியில்
என் மீது பற்று கொள்ள
நேற்றும் நான் இங்கு இருந்தேன்
இன்றும் நான் இருக்கிறேன்
நாளை தொடர்வேன்...
அதற்குள் என் காதலை
அவள் அறியட்டுமே
அதுவரை
காலமே என் காதலை
காப்பாற்று..!

மறந்து போகிறேன்...

உன் பேச்சிலும் 
சிரிப்பிலும் 
தொட்டு பேசும் நிலையிலும் 
உன்னோடு இருக்கையிலும் 
கலந்தே போகிறேன் 
அதில்
கரைந்தும் போகிறேன்
தன்னிலை துறந்து
என்னை மறந்து போகிறேன்...