28 டிச., 2012

விடியாமலே...





சொன்ன வாக்கும் 
நாங்கள் போட்ட வாக்கும் 
மறந்த நிலையில் நாங்கள்
===================

இரண்டு மணி நேரம் 
இருண்ட தமிழகம்
அறிந்தும் ,சொல்லியும்...
இன்று இன்னும் 
விடியாமலே...

27 டிச., 2012

அவநம்பிக்கை...




பாகனுக்கு
பணத்தை பெற்று 
கொடுத்தது யானை...

கொடுத்த பொருளுக்கு 
ஆசிர்வாதம் தந்தது 
தும்பிக்கை...

காலில் விலங்கோடு 
யானை
மனிதனுக்கோ 
அவநம்பிக்கை...

24 டிச., 2012

காதல் தீ...




வாலிபத்தின்
கட்டாயக்கல்வி...

பார்த்தால் போதும்
பற்றிக்கொள்ளும்
காதல் தீ...

அணைக்க தான்
ஆளில்லை
இருந்தாலும் தொடரும்
ஒருதலையாய் 


இருவகை...


கேட்பதை கொடுக்கும்
நிலை
பெண் குழந்தைக்கு 
அப்பாவும் 
ஆண் குழந்தைக்கு 
அம்மாவும் 
அடைக்கலம்...

வேண்டியதை  பெற 
சண்டை அம்மாவிடம்
ஆண் குழந்தை...

கேட்டதை பெற 
சிரிப்புடன்  அப்பாவிடம் 
பெண் குழந்தைக்கு...

படம் சொல்லும் கவிதை ...
















வேலையின் ஆதிக்கம் 
இந்த நிலையின் 
கோலம்....
=======================
வேலையோடு வேலை 
சூழ்நிலை தந்த நிலை...


வேடிக்கை என்பது 
இளசுகளின் வாடிக்கை 


கிடைக்கும் நேரத்தில் 
ரசிக்கும் வேலை ...
========================


12 டிச., 2012

ஞாபகங்கள்...




ஞாபகத்திற்கு  மட்டும் 
மறதியும் பொய்யும் 
தெரியாது...


ஞாபகங்கள்
சொன்னது நேற்றைய 
நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன்...

என்னை கண்டு 

ஒழிந்துக்கொண்ட 
நபரை பார்த்தவுடன் 
ஞாபகங்கள் சொன்னது 
பழைய உறவுகளை...

அழியாத 

சுவடுகளாய் 
ஞாபகங்கள் தொடரும் வண்ணமாய் 
இன்னும் மனதில்...

இன்பமும் துன்பமும் 
இணைந்த 
இரு கோடுகளாய்....

9 டிச., 2012

ஆசை...


வாழ்வின் மீது 
மனிதனுக்கும்...

பொய் மீது 
கவிஞ்சனுக்கும்...

காதல் மீது 
வாலிபத்துக்கும்...

பதவி மீது 
அரசியல்வாதிக்கும்...

லஞ்சத்தின் மீது 
அதிகாரிகளுக்கும்...


ஆசை துறக்க 
ஆசை
புத்தருக்கும்....
==============

6 டிச., 2012

அப்பாவின் முகம்...



அப்பாவின் சட்டையை 
போட்டுப் பார்த்த போது
அப்பாவின் வாசனை...

எனது மகனை 

பள்ளியில் விட்டபோது 
அப்பாவின் நினைவு...


எனக்கு அறிமுகமில்லாதவர் 
விருந்துக்கு அழைத்தார் 
அப்பாவின் உறவு என்று...

மரித்த பின்னும்

ஒவ்வோன்றிலும் 
மறையாத முகமாய் 
அப்பாவின் முகம்...


மெல்லிய மலர்கள்...




இரவோடு உலாப்போன 
மேகம் எழுதிய கவிதைகளை 
மறைக்கமுடியவில்லை 
மலர்கள் மேல் 
மழைத்துளிகள்...
==============================
கொட்டியது மழை 

மரணிக்கவில்லை 
ஜனித்தது
மெல்லிய மலர்கள்...
===============================
இரவு  தூறிய தூறலை 
மண்ணும்
மலரும் 
காட்டிக்கொடுத்தது...
===============================

உன்னை நனைத்தாலும் 
நனைத்த துளி 
விழுந்ததாலும்

மழைக்கும் 
மலருக்கும் 
பெருமிதம் ....
==============================