25 செப்., 2012

விஞ்ஞானிகள் குடியிருப்பில் பெண் உளவாளி சிக்கினார்



பெங்களூர் : பெங்களூர் இஸ்ரோ விஞ்ஞானிகள் குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெண் உளவாளியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய விண்வெளி ஆய்வுமைய(இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அலுவலகம் மற்றும் விருந்தினர் மாளிகை பெங்களூர் எலகங்காவை அடுத்த பழைய ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ளது.

கடந்த 21ம் தேதி இந்த அலுவலகத்திற்கு வந்த மர்ம பெண், தன்னை இஸ்ரோ விஞ்ஞானி என்றும், இங்கு விஞ்ஞானிகள் ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்க வந்ததாக வும் கூறினார். இருப்பினும் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட ஊழியர்கள் அவரது அடையாள அட்டையை ஸ்கேன் செய்தபோது, அவர் இஸ்ரோ விஞ்ஞானி இல்லை என்பது தெரியவந்தது.

அதிகாரிகள் விசாரணையில் அப்பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரோ பாதுகாப்பு அதிகாரி லட்சுமிகாந்த், ஜீவன் பீமாநகர் போலீசில் புகார் அளித் தார். அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பெண் கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த பியூலா எம்.ஷாம் (40) என்பது தெரியவந்தது. இவரது கணவர் அலக்ஸ் அகமதாபாத் தில் ஆசிரியராக உள்ளார். 2 குழந்தை உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றார்.

மனநலம் சரியில்லாதவரா?

பியூலாவின் கணவரிடம் நடத்திய விசாரணையில், பியூலாவுக்கு மனநலம் சரியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், அப்படியுள்ளவர் ஐடி கார்டு தயாரிக்கும் அளவுக்கு எப்படி துணிச்சலுடன் செயல்பட்டார், 2 நாட்கள் யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு விஞ்ஞானியாக நடித்தார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. பியூலாவின் செல்போன்கள், ஈமெயில் ஆகியவை ஆய்வு செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் பியூலாவுக்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்னர். ராணுவ குடியிருப்பில் உளவு பார்த்ததாக வேலூரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பியூலாவின் கைது அவர் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினகரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக