30 ஜூன், 2012

8 ஆண்டுக்கு பிறகு பலத்த மழை: அசாம் வெள்ளத்தில் மிதக்கிறது

8 ஆண்டுக்கு பிறகு பலத்த மழை:  அசாம் வெள்ளத்தில் மிதக்கிறது

கவுகாத்தி, ஜூன்.30-

அசாம் மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரம்ம புத்ரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அசாமில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழை தொடர்ந்து பெய்வதால் அசாம் மாநிலத்தின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த 23 மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான வீடுகள், குடிசைகள், கால்நடைகள் வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

வெள்ளத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்து சுமார் 40 லட்சம் பேர் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். எல்லா கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மக்கள் எங்கு செல்வது என்று தவித்தப்படி உள்ளனர்.

அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் 3 நேரமும் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்க ராணுவமும், தேசிய பேரிடர் குழுவும் அழைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுடன் விமானப்படை வீரர்களும் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

8 ஆண்டுகளுக்கு பிறகு அசாம் மாநிலத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்து விட்டனர். ஏராளமானவர்களை காணவில்லை. எனவே சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இருவரும் விரைவில் அசாம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது...
மழை இல்லை என்றாலும் கவலை வந்தாலும் கவலை இது தான் இன்றைய நிலை ....இயற்கையின் சதியில் சில சமயம் விடுபடமுடியாயது தான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக