21 செப்., 2011

அண்ணா துரை!


மறைந்து போனா
அண்ணா துரை,
இன்று மட்டும் கழகங்களுக்கு,
மறுபிறப்பு!

கல்லறைகள்,சீரமைக்கப்பட்டு
அண்ணாவை இன்று ஒருநாள் மட்டும்,
மலர்கள் தூவி நலம் விசாரிக்கப்படும்

இவரின் சிலைகள்
தூசித்தட்டி ,புதுப்பிக்கப்படும்,
மாலைகள் சூட்டி அழகுப்பார்க்கப்டும்,
மாலைக்குள் மறக்கப்படும்!

மீண்டும் அடுத்த வருடமே,
இவரின் நினைப்பு,
செப்டம்பர் - 15 மட்டும் மறுபிறப்பு !

வாழ்க்கை மாறின!

வந்து மாதமாச்சு,
எண்ணங்களை எனது
புகைப்பட தொகுப்போடு,
தொடர்புக் கொண்டேன்.

வாஹ்ட் திஸ் கேரன்மாம் என்று 
என் கிராமத்து புகைப்படத்தை காட்டி 
அருகில் இருந்த ,பேத்தி கேட்க,
இணையத்தோடு ,இணைத்துவிட்ட 
இவளுக்கு என்னத்த சொல்ல,

திஸ் இஸ் மை வில்லேஜி 
வீடியோ கேம் என்று எனக்கு,
தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னேன்!
சிரிப்பு ஒன்று உதிர்த்திவிட்டு சென்றால் ,
அமெரிக்காவில் வாழும் பேத்தி .

மாற்றங்கள் வந்ததால்,
விளையாட்டுக்கள் மறைந்தன,
விளையாட்டுக்கள், மறைந்ததால்,
மாத்திரையை தேடி வாழ்க்கை மாறின!

இன்று தானே புரிகிறது...!




தலைவர்கள் கைது,
தொண்டர்கள் கொதிப்பு,
தீக்குளிப்பு !

திரைப்படம் பார்க்க,
கூடத்தில் நசுங்கி ரசிகன் இறப்பு.

ஊழல் போக்க உண்ணாவிரதம்,
அடி தடியாய் மாறியதில் ஐந்து பேர் பலி !

காதல் கைக் கூடவில்லை 
காதலர்கள் தற்கொலை !

சாமி ஊர்வலம் 
மதக் கலவரமானதில்,
ஆசாமிகள் மரணம் 

இன்று தானே புரிகிறது 
யாரும் தனக்காக 
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !

20 செப்., 2011

காதலர்கள் என்று சொல்பவர்களே...




இரண்டு நாள் பார்த்து ,
இரண்டு நாளில் சிரித்து,
இரண்டு நாட்களில் ஈர்த்து,
இரண்டு நாட்களில் காதல் கொண்டு,
இரண்டே நாளில் கடிதம் கொடுத்து,
காதலர்கள் என்று சொல்பவர்களே...

பருவம் விதைத்த விதைக்குள்,
தங்களை விதைத்து,
நாங்கள் காதலர்கள் என்று,
விலாசம் சொல்பவர்களே.....


காதல் ஜோதியை ஏற்ற 
இரு வீடுக்குள் விளக்கை 
அணைத்தவர்களே!

கவனம் சிதறிய நிலையில்,
யாருக்காக இந்த ஓட்டம் ?
எங்கள் மனங்களை அறியாத நீங்கள் 
இரண்டே மாதத்தில் 
உங்கள் மனங்களை அறிந்தது எப்படி ?

மதத்தை தாண்டிய பயணமல்ல 
உங்கள் காதல் பயணம்!
காதல் மதம்பிடித்த நிலையில் தான் 
உங்கள் பயணம்!

அறிவு தான் தொடக்கம் 
தெளிவு தான் வாழ்க்கை,
எல்லாம் அறிந்தும் 
தெளிவுல்லை, தேர்வும் சரில்லை 
நீங்களும் ஒரு மன நோயாளியே !

தெளியும் ஒரு நாள் ,அன்று ..
எங்கள் இன்றைய நிலையை 
பெற்றோர்களாய் அறிந்துக்கொள்வீர்கள்!
அது வரை செவிடன் காதில் ஊதிய சங்கு!