30 நவ., 2011

தொலைதூரக்காதலாய்

















மழையே கருவாய்
நிலைமாறிய

கவியாய்
மனதை மயக்கும் 
நிலையாய்
நிறம் மாறும்
மனம் விரும்பும்

மழையே விடலைப் 
பருவத்தின் 
தொலைதூரக்காதலாய் 
அணைத்துக்கொள்ளும்.


மழையா!
பள்ளிக்கு விடுமுறை 
மழையா!
காகித கப்பல் ஓட்டம்
மழையா 
சாரலோடு ஆட்டம் 
மழையா!
ஆனந்த ஆர்பாட்டம்

இளமை பருவத்தை 
இன்றும் நினைக்க 
இனிக்கும்...
தொலைதுராக் 
காதல் மழை

மண்ணுக்கும் 
மணக்கும் மலராய்
விதைக்கும்
விதைக்கு உயிராய்
எனக்கு உறவாய் 
இன்றும் மழையே
என் தொலைதூரக் 
காதலியாய்...

சிறு துளியோ 
பட்டால் சிலிர்க்கும்
மனதை மயக்கும்
நனைந்து சென்றால்   
இனிய இன்பத்தை
கொடுக்கும்...

இந்த மழையோ
மலைக்குள் 
அருவியாய்
எனக்குள்
உணர்வாய் 
உருமாறி 

என்றும் 
காதல் பேசும் 
மழையே 
தொலைதூரக்காதலாய் 

1 கருத்து:

  1. தலைப்பு பார்த்து விட்டு அண்ணா அண்ணிக்கு எழுதிருக்கங்கன்னு நினைத்தேன் ...ஆஹா ஹா அப்புறம் தான தெரிஞ்சது ,,,,கவிதை சூப்பர் அண்ணா .....மீண்டும் மீண்டும் படித்தேன் ...கவிதை மழையில் நனைந்தேன் அண்ணா ,,,,,

    பதிலளிநீக்கு